வேப்பூர் பகுதியில் வழிப்பறி செய்த கொள்ளையன் சண்முகம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


வேப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி செய்த கொள்ளையன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டார்.


கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோட்டில் கடந்த 4. 7.2019 ஆம் தேதி தொண்டாங் குறிச்சியை சேர்ந்த வயது (56) என்பவர் இருசக்கர வாகனத்தில் சேலம் மெயின் ரோடு காட்டுமையிலூர் கைகாட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சென்னசமுத்திரம் பகுதி ஓடைக்காரன் தோட்டத்தைச் சேர்ந்த ராஜி மகன் சண்முகம் வயது (38) என்பவர் நாராயணசாமி வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கி பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை பறித்தார். இதுகுறித்து வேப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஸ்ரீபிரியா விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் குழந்தைவேலு என்பவர் வீட்டில் 14 பவுன் திருடியதும் பின்னர் நகையை கைப்பற்றி சண்முகத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவர் மீது வேப்பூர் காவல் நிலையம் மட்டுமின்றி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு  குன்னம் அரியலூர் டவுன் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் குற்றச்செய்கயை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஐபிஎஸ், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஐஏஎஸ் அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்ட தன் பேரில் வழிப்பறி கொள்ளையன் ஓர் ஆண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.