திருப்பூரில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி கோபாவேச ஆர்ப்பாட்டம்

 


திருப்பூர், ஜூன் 15 -

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் அசோக்கை படுகொலை செய்த சாதிவெறியர்களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் கோபாவேச கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக வெள்ளியன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட கட்சி அணியினர் பெருந்திரளானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.