சிஎஸ்ஐ நெல்லை திருமண்டல உதவி குரு அபிசேக ஆராதனை

சிஎஸ்ஐ நெல்லை திருமண்டல உதவி குரு அபிசேக ஆராதனை

பிஷப் கிறிஸ்துதாஸ் நடத்தினார் 

சுரண்டை

சுரண்டை அருகே உள்ள அதிசயபுரம் தூய இம்மானுவேல் ஜெப வீட்டில் சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டல உதவி குருக்களுக்கான அபிசேக ஆராதனை நடைபெற்றது. இதில் நெல்லை திருமண்டல பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் தலைமை வகித்து சிறப்பு செய்தியளித்து 10 பேர்களை உதவி குருக்களாக அபிசேகம் செய்தார். திருமண்டல சினாட் நிர்வாக குழு குருத்துவ செயலாளர் அருள்திரு காந்தையா நல்லபாண்டியன் உதவி குரு அபிசேக ஆராதனை நடத்த சினாட் நிர்வாக குழுவின் தீர்மானத்தை வாசித்து உறுதிப்படுத்தினார். தொழிலதிபர் சென்னை டிஎஸ். ஜெயசிங் சிறப்புரை நிகழ்த்தினார். சினாட் நிர்வாக குழு லே செயலாளர் வக்கீல் சாமுவேல் பாஸ்கர், மூத்த குருக்கள் ஜெபராஜ், ப்ரட்ரிக் சத்ய சாமுவேல், ஐஎம்எஸ் பொதுச்செயலாளர் கிங்ஸ்லி ஜான், சுவாமிநாதன், ஞானப்பிரகாசம், பாக்கியராஜ், சவுந்தரபாண்டியன், ஆர்சி பங்கு தந்தை ஜோமிக்ஸ் அடிகளார், மதுரை அரசரடி தமிழ் நாடு இறையியல் கல்லூரி பேராசிரியர்கள் சினாட் நிர்வாக குழு உறுப்பினர்கள் புஷ்பராஜ், கரிசல் டேவிட், ஜெகன், வக்கீல் சதீஷ், அதிசயபுரம் ஜான், ஜெபமணி, செல்வக்குமார், சுரண்டை சீயோன் சேகர செயலாளர் தவமணி சொக்கையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.