இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரை மாணவரிடம் விசாரணை

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக கருத்துகளை முகநூலில் பதிவு செய்த மதுரை மாணவர் முர்ஷித்திடம் தேசிய புலனாய்வு போலீஸார் விசரணை


இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து மத்திய தேசிய புலானாய்வு முகமை , தொடர்ந்து தமிழகத்தில் கண்காணிப்பு பணிகளில் ஈ.டுப்பட்டு வந்தனர்.


இது தொடர்பாக கோவையில் தேசிய புலனாய்வு முகமை NIA 3 பேரை கைது செய்து விசாராணை செய்தது. இதில் அவர்களுக்கும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை பரப்பியுள்ளனர். மேலும் இவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் NIA அமைப்பினர்.நேற்று இரவு வில்லாபுரம் பகுதியில் உள்ள சதக் அப்துல்லா என்பவரின் மகன் முர்ஷித் (வயது 20) என்பவரை விசாரணைக்கு ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இவர் அரபி பாட சாலையில் படித்து வரும் மாணவர் .இவர் முகநூல் மூலம் கோவையில் நண்பர்களுடன் தொடர்பு வைத்துள்ளது தெரிய வந்தது. முதல் கட்ட விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்ட மாணவன் முர்ஷித் தொடர்ந்து எப்போது அழைத்தாலும் வர வேண்டும் என்ற நிபந்தைனையின் பேரில் விடுவிக்கபட்டுள்ளார்.


Previous Post Next Post