கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 96வது பிறந்த நாள் விழா

காஞ்சிபுரம் மாவட்டம், பம்மல் நகர திமுக சார்பில், கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 96வது பிறந்த நாள் விழா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில், தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு வாக்களித்த, வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பம்மல் நகர செயலாளர் வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கழக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவர் திண்டுக்கல் ஜ.லியோனி, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ.,  பல்லாவரம் நகர செயலாளர் இ.கருணாநிதி எம்எல்ஏ.,ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  திருநீர்மலை த.ஜெயக்குமார், எஸ்.கே.நெப்போலியன், ப.காளேஸ்வரன், என்.பன்னீர்செல்வம்,  பி.ஜே.வேந்தன், பா.டில்லி, வி.எஸ்.ஜெகன்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகளும், கழகத்தினரும் பங்கேற்ற இக்கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.