மதுரையில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் பலி

 


மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு எம்.ஜி.ஆர் பாலத்தின் அருகில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த செல்லூர் போலீசார் வாகன சோதனையின் போது இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றபோது வாலிபர்களை போலீசார் லத்தியால் தாக்கியதில், தங்கவேல் என்பவரது மகன் விவேகானந்தகுமார் (38) என்பவர் காதில் இரத்தம் வந்து சம்பவ இடத்திலேயே மயங்கியநிலையில் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்த மற்றொரு வாலிபருக்கு சிறிது காயம் ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் போலிசாரை கண்டித்தும் உரிய விசாரணை நடத்தகோரியும் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இறந்த இளைஞரின் உறவினருக்கு 2வயது குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்தி காவல்துறையினர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்