திருப்பூரில் எரிவாயு மயானம் திறப்பு

தமிழகத்திலேயே இரண்டு நவீன மயானங்களை நிர்வகிக்கும் திருப்பூர் வடக்கு ரோட்டரி:
***********"************"**************
திருப்பூர் கருவம்பாளையத்தில் ரூ.2.20 கோடியில் எரிவாயு மயானம் திறப்பு
********************************************
திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் - ரோட்டரி ஆளுநர் இ.கே.உமர் பங்கேற்பு


திருப்பூர் வடக்கு ரோட்டரி மாநகர மயான அறக்கட்டளை , திருப்பூர் மாநகராட்சி நிதி, திருப்பூர் தெற்கு எம்.எல். ஏ., நிதி என மொத்தம் ரூபாய்.2.20 கோடி மதிப்பில் திருப்பூர் கருவம்பாளையத்தில் ' சாந்தி வனம் ' என்ற எரிவாயு மயானம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் எரிவாயு தகன மேடை, காத்திருப்பு அரங்கம், காரிய மண்டபம், ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த எரிவாயு மயானத்தில் ஆம்புலன்ஸ், பிரீசர் பாக்ஸ், ஜெனரேட்டர், சிசிடிவி கேமரா, உள்பட பல வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
இந்த எரிவாயு மயானத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா ஞாயிறன்று நடந்தது. எரிவாயு மயானம், அரங்குகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாநகர கமிஷனர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் இ.கே.உமர் முன்னிலை வகித்தார்.
இந்த மயானம் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்க மாநகர மயான அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு, பராமரிக்கப்படும். ஏற்கனவே திருப்பூர் மின்மயனாத்தை இந்த ரோட்டரி சங்கம் சிறப்பாக பராமரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த எரிவாயு மயானம் துவக்கப்பட்டு உள்ளதன் மூலம் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் தமிழக அளவில் இரண்டு நவீன மாயானங்களை நிர்வகித்து மற்ற சமூக சேவை அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்த மயானம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் திருப்பூரில் தகனம் செய்வதற்கு ஏற்படும் காலதாமதம் பெருமளவு குறையும்.
இந்த எரிவாயு மயானம் அர்ப்பணிப்பு நிகழ்வில் திருப்பூர் வடக்கு ரோட்டரி தலைவர் எஸ். ஸ்ரீதரன், செயலாளர் பி.மகேஷ்பாபு, பொருளாளர் ஏ.மாரியப்பன், எரிவாயு மயான அறக்கட்டளை தலைவர் ஆர்.குப்புசாமி, துணை தலைவர்கள் கே.எம்.சுப்பிரமணியம், வி.பாலசுப்பிரமணியம், செயலாளர் ராம சங்கரலிங்கம், இணை செயலாளர் டி.லக்ஷ்மணன், பொருளாளர் எஸ்.பாலசந்தர், திட்ட தலைவர் வி.முத்துசாமி, அறக்கட்டளை நிர்வாகிகள் கே.ரத்தினசாமி, ஏ. பி.ஜெயப்பிரகாஷ், கே. சண்முகராஜா, தீபக் குமார் சாவ்லா, பி. தனவேலு, ஏ.மாரியப்பன், ராம் பாபு சிங், எச்.நாகேந்திர பிரசாத், பி.திருநாவுக்கரசு, கே.தமிழரசன், எம்.ராஜ்குமார், எம்.சுப்பிரமணியன், ஆர்.எம்.சுப்பிரமணியன், ஜெய்வாய்பாய் ஈஸ்வரன், அர்பன் பேங்க் தலைவர் பி.கே.எஸ். சடையப்பன், முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், உஷா ரவிக்குமார், விவேகானந்தன், திருப்பூர் மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், உதவி ஆணையாளர் கண்ணன், உதவி பொறியாளர் முனியாண்டி சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.