ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் - மன்சூரலிகான்

 


மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால்தான் தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளதால் இந்த திட்டங்களை எடுத்துக்கொண்டு மத்திய மாநில அரசுகள் ஓடிவிட வேண்டும் என ஆவேசம் தெரிவித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் காவிரியில் தண்ணீர் தான் ஓட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்


இந்த ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால் தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 8 ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்துப்போய் உள்ள நிலையில் குடிநீருக்காக காவிரியை நம்பி இருந்த சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் குடி தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர் இந்நிலையில் காவிரியில் மேலும் ஒரு அதிர்ச்சியாக ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முயல்வதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடிகர் மன்சூர் அலிகான் தஞ்சை மாவட்டம் தீபம்மாள்புரத்தில் ongc அமைத்துள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகளால் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை இன்று சந்தித்து பேசினார் ஓஎன்ஜிசி அமைந்துள்ள பகுதியையும் அவர் பார்வையிட்டு பின்னர் அளித்த பேட்டியில்
மத்திய மாநில அரசுகள் டெல்டா மாவட்டங்களில் இருந்து மீத்தேன் ஹைட்ரோ கார்பன் ongc போன்ற திட்டங்களை எடுத்துக்கொண்டு ஓடி விட வேண்டும் என்றும் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட வேண்டும் என்றும் கூறிய மன்சூர் அலிகான் தமிழகத்தின் வளங்களை மீண்டும் மீண்டும் கொள்ளை அடித்து மக்களை வெளியேற்றி வருகிறார்கள் எனக் குற்றம் சாட்டிய நடிகர் மன்சூர் அலிகான் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவைகளை குப்பையிலிருந்து மனிதக் கழிவிலிருந்து கூவம் ஆற்றில் இருந்து கூட எடுக்கலாம் அதை விட்டுவிட்டு விவசாயத்தை அளிப்பதாகவும் இதுபோன்ற திட்டங்களால்தான் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராடும் எனவும் தஞ்சையில் வந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகபோராட் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.