திருப்பூரில் ஓக்கினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு

திருப்பூரில் ஓக்கினவா ஸ்கூட்டரின் 21 வது புதிய கிளை திறப்பு விழா.


திருப்பூரில் ஓக்கினவா ஸ்கூட்டரின் 21 வது புதிய கிளை திறப்பு விழா.ஊத்துக்குளி சாலையில் நடை பெற்றது கிளையினை தேசிய கயிறு வாரியத்தின் முன்னாள் தலைவர் சி.பி,ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.இந்த சோரூமில் 40 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான ஸ்கூட்டர்கள் இரண்டு வருட வாரண்டியுடன் சிறப்பு அம்சங்களுடன் பேட்டரியில் இயங்க கூடிய ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.மேலும் துவக்க விழா சலுகையாக ஒரு மாதம் முழுவதும் வாடிக்கையாளர்கள் வாங்க கூடிய ஸ்கூட்டர்களுக்கு எக்ஸ்டரா பிட்டிங் இலவசமாக பொருத்தி தரப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் சோரூமின் உரிமையாளர் செந்தில்குமார்,சிவச்செல்வி,ஓக்கினவா ஸ்கூட்டரின் தமிழகம்,கேரளாவின் அலுவலக ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.