அமைச்சர் செங்கோட்டையனிடம் கோரிக்கை மனு

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொடச்சூர் ஊராட்சி ஓலப்பாளையம் இருந்து சாணார்பாளையம் வரை தார்சாலை வசதி செய்ய வேண்டியும், ஓலப்பாளையம் அங்கன்வாடி மையத்தை பழுதுபார்ப்பது, ஒலப்பாளையத்தில் தெருவிளக்கு வேண்டியும்  முன்னாள் நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் எம். கந்தசாமி தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோரிடம்  கோரிக்கை மனுவை வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன், நகரச் செயலாளர் காளியப்பன் உள்ளனர்.