தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

   திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29.06.2019 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 3.00 மணி வரை உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.


   இந்நிகழ்ச்சியில் கோவை, சென்னை, ஈரோடுமற்றும் திருப்பூர் போன்ற பெருநகரங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்யப்பட உள்ளனர் இம்முகாமில் பணிநியமனம் பெற்றவார்களுக்கு கால்நடைபராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை மு.ராதாகிருஷ்ணன் பணிநியமன ஆணை வழங்க உள்ளார்.மேலும், இளைஞர்கள் தங்களது வேலை பெறும் திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவாக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக பல்வேறு திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் வருகை புரிந்து இலவசமாக திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பினையும் அளிக்க உள்ளனா. அயல் நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும் தனித் தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமில் அனைத்து மாவட்டத்தில் உள்ள வேலை தேடுபவர்கள் அனைவரும் பங்கேற்று பயன் பெறலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..