மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில்  திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

       


 


 


திருப்பூர்,சூன்.16- மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மாநில உரிமைக்கும்,சமூகநீதிக்கும் எதிராக இந்தி-சமஸ்கிருதம்-"நீட்" நுழைவுத் தேர்வுகளை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் 15.06.2019 சனிக்கிழமை காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் துவங்கி நடைபெற்றது.


நிகழ்வில் திருப்பூர் மாவட்ட திக தலைவர் இரா.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.


திடருப்பூர் மாநகர திக தலைவர் இல.பாலகிருட்டிணன் அனைவரையும் வரவேற்றார். 


திருப்பூர் மாநகர திக செயலாளர் பா.மா.கருணாகரன்,துணைச் செயலாளர் தென்னூர் முத்து,மாவட்ட திக இளைஞரணி செயலாளர் ச.துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


திருப்பூர் மாவட்ட திக செயலாளர் யாழ்.ஆறுச்சாமி,திருப்பூர் மாவட்ட திக இளைஞரணி அமைப்பாளர் பூ.குருவிசயகாந்த் ஆகியோர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றினர்.


கோவை மண்டல திக இளைஞரணிச் செயலாளர் ச,மணிகண்டன்,மாவட்ட பக துணைத் தலைவர் "நளினம்" க.நாகராஜ்,திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் சேகாம்பாளையம் ரங்கசாமி,திருப்பூர் மாவட்ட திக இளைஞரணியைச் சார்ந்த பெ.செல்வராஜ்,பெரியார் பெருந்தொண்டர்கள் கரு.மைனர்,மு.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.


ஆர்ப்பாட்ட முடிவில் திருப்பூர் மாநகர திக இளைஞரணி தலைவர் மனோ நன்றி கூறினார்.