கவிஞர் முகில் பரமானந்தம் அவர்களின் உடல் தானம்

கவிஞர், எழுத்தாளர் , நாடக ஆசிரியர்,  நடிகர்,  பாடகர்,   அறிவொளி முன்னோடி என்ற பன்முகத் தன்மை கொண்ட கவிஞர் முகில் பரமானந்தம் அவர்களின் உடல் தானம்


 


தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மற்றும் அறிவொளி இயக்கம், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகியாக செயலாற்றியவர் முகில் பரமானந்தம் அவர்கள்.   சடையமுத்து வாத்தியார் அவர்களின் மகனும் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டப்பமைப்பின் கௌரவத்தலைவருமான இராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனத்தின் உதவிப்பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முகில் பரமானந்தம் (63) ஆவார்.


அன்னார் 14.06.2019 அன்று பிற்பகல் சி.எம்.சி மருத்துவமனையில் மறைந்தார்.  அன்னாரின் பூத உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவற்காக நாளை 16.06.2019 காலை 11 மணிவரை வேலூர் அடுத்த பொய்கை எம்.சி.சாலையில் உள்ள மனோன்மணியம் இலவச இரவு பள்ளி, 3/160, M.C.சாலை, பொய்கை இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும். 


உடல் தானம்


16.06.2019 அன்று பிற்பகல் 12 மணியளவில் அன்னாரின் உடல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு தானமாக வழங்க குடும்பத்தினர் இசைவு தெரிவித்துள்ளனர்.


தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகக் குழு இரங்கல் 


முகில் பற்றி அறிந்த  ஒவ்வொருவருக்கும் அவரைப் பற்றி பகிர்ந்து கொள்ள ஒரு ஆழமான செய்தி இருக்கும். அவரது நினைவுகளை என்றென்றும் போற்றும்கருத்தாழம் மிக்க செய்தி  அதில் பொதிந்திருக்கும். முகில் சிறந்த  கவிஞர் எழுத்தாளர் நாடக ஆசிரியர் நடிகர் பாடகர்  அறிவொளி முன்னோடி என்ற பன்முகத் தன்மைகொண்ட மாபெரும் ஆளுமை. 


முகில் அவர்களது மறைவுச் செய்தி அறிந்ததும் மாநிலக் குழு ஆழ்ந்த வருத்தமடைகிறது. தோழர் முகில் அவர்களது பங்களிப்பு என்றென்றும் அறிவியல்இயக்கத்தின் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அன்னாருக்கு அறிவியல் இயக்கத்தின் மாநிலக் குழு சார்பில்  அஞ்சலியை செலுத்துகிறோம்.  அவர் விட்டு சென்ற பணிகளைஅறிவியல் இயக்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். 


கவிஞர்,மக்களிசை பாடகர்,எழுத்தாளர், நாடகவியலாளர், வீதிநாடக கலைஞர்,நாட்டுப்புற பாடகர்,இசையமைப்பாளர், கலைப்பயண வித்தகர், அறிவியல்இயக்க,அறிவொளி இயக்க, தமுஎச இயக்க முன்னோடி, மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்,மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்,சிறந்த நிர்வாகத்திறனுடையவர்,ஆளுமைத்திறனாளர், இலக்கியவாதி,சமூகப்போராளி இப்படி பன்முகத்திறனுடைய கலைஞனின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரோடு இணைந்துபழகிய நினைவுகள் காலத்தால் அழியாதவை.


தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர். தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.குறிப்பு: நேரில் அஞ்சலி செலுத்த வருவோர் தேவைப்படின் தொடர் கொள்ள: கு.செந்தமிழ் செல்வன்- 9443032436; எஸ்.சுப்பிரமணி - 7598340424 ; பூபாலன்- 9944274858


ஆழ்ந்த இரங்களை வருத்தத்துடன் நேரில் பதிவு செய்தவர்கள்


வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எம்.சிலுப்பன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மற்றும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், செயற்குழு உறுப்பினர் எம்.பிரபு


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொருளாளர் கு.செந்தமிழ்செல்வன், மாநில செயலாளர் எஸ்.சுப்பிரமணி, மாவட்ட தலைவர் க.பூபாலன், ந.கருணாநிதி, அ.கலைநேசன், பி.ராஜேந்திரன், சி.குணசேகரன், எ.முத்துகிருஷ்ணன், பி.ராமு, கே.விஸ்வநாதன், ச.குமரன், திருச்சி மாவட்ட சார்பிலும் என் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். தி. சாந்தி மனோகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், மாநில அமைப்புச்செயலாளர் நீல சந்திரகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பெல் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.


இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது..


மறைந்த முகில் பரமானந்தம் அவர்கள் பெயருக்கு ஏற்றார் போல் பரம ஆன்ந்தம் உள்ளம் எப்போது சிரித்துக்கொண்டே அனைவரிடமும் பழகுபவர். தனக்கு தெரிந்த கலைகளை அனைவரும் தெரிந்துகொள்ள உதவிடுவார்.  1985ஆம ஆண்டில் தமிழக அரசு அறிவொளி இயக்கத்தினை அறிமுகம் செய்த போது வேலூர் மாவட்டத்தின் பட்டி தொட்டி எங்கு பரப்பியவர்.  பாரத மிகுமின் நிறுவனத்தின் துணை பொதுமேலாளராக பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். பயிற்சியாளர், சிறந்த நிர்வாகத் திறனுடையவர், ஆளுமைத்திறனாளர், இலக்கியவாதி, 


சமூகப்போராளி இப்படி பன்முகத்திறனுடைய கலைஞனின் மறைவுபேரிழப்பாகும்.