திருப்பூர் அர்பன் பேங்க் நிர்வாகிகள் பதவியேற்பு

திருப்பூர் நகர கூட்டுறவு வங்கிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. தி.மு.க.,வினரின் வழக்கையடுத்து, தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கு மண்டல தீர்ப்பாயமானது,  தேர்தல் நடைமுறைகளை தொடர, மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையத்துக்குகடந்த மாதம்  உத்தரவிட்டது. 

 இந்த உத்தரவினையடுத்து, கடந்த 3&ந்தேதி, திருப்பூர் நகர கூட்டுறவு வங்கிக்கு இயக்குநர்களும், கடந்த 7&ந்தேதி தலைவர் தேர்தலும் நடந்தது. இதில், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக இலக்கிய அணி இணை செயலாளரான   பி.கே.எஸ்.சடையப்பன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கே.கண்ணுசாமி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், மதிலி, மீனா, பன்னீர்செல்வம், ராஜகோபால், ராஜேந்திரன், ராமசாமி, சண்முகப்பிரியா, சுமதி, வேலுசாமி ஆகியோர் இயக்குநர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்குமான பதவியேற்பு விழா, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் முன்னிலையில், நேற்று (வியாழக்கிழமை)  திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள அர்பன் பேங்க் அரங்கில் நடைபெற்றது. பி.கே.எஸ்.சடையப்பன் கோப்பில் கையெழுத்திட்டு தலைவராக பதவியேற்றார். தொடர்ந்து இயக்குநர்கள் பதவியேற்றனர்.
புதிதாக பதவி ஏற்ற நிர்வாகிகளுக்கு பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் வங்கி பொது மேலாளர் குமரேசன்,  முன்னாள் கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கருவம்பாளையம் மணி, தம்பி மனோகரன், கண்ணபிரான், தாமோதரன், தனபால், வாலிபாளையம் ரவி, மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.