பாண்டவர் அணி சார்பாக வீடியோ - நடிகவரலட்சுமி கண்டனம்

சென்னை, ஜூன், 16- நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பாண்டவர் அணி சார்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டதற்கு நடிகை வரலட்சுமி அதிர்ச்சியடைந்து கண்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட் டி யிடு கிறார் கள். இரு அணிகளுமே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.பாண்ட வர் அணியை இணையத்தில் விளம்பரப் படுத்த வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அதில், சரத்குமார், ராதாரவி இருவரையும் கடுமையாக விமர் சித் திருந்தார் கள். இருவரது சுயநலத்தால், நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறியிருந்தார்கள். இந்த வீடியோவை விஷால் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சரத்குமாரின் மகளான வரலட்சுமி அதிர்ச்சியடைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரச்சார வீடியோவில் நீங்கள் எவ்வளவு தாழ்ந்து போய் விட்டீர்கள் என்பதை எண்ணி அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தேன். உங்கள் மேல் இருந்த கொஞ்ச நஞ் ச மரியாதையும் தற்போது போய்விட்டது. அவர் குற்றவாளியாக இருந்திருந்தால் ஜெயிலுக்கு சென்றிருப்பார். எனவே உங்கள் | தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். இது போன்ற கீழ்த்தரமான வீடியோக்கள் உங்கள் தரத்தை காட்டுகிறது. இனிமேல் ஒரு சாது போல காட்டிக் கொள்ளாதீர்கள். உ ங் க ளு ன ட ய ெப ா ய் க க ள யு ம் , இரட்டை வேடத்தையும் அனைவருமே அறிவார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எனது ஓட்டை இழந்து விட்டீர்கள் என பதிவிட்டுள்ளார்.