திருப்பூரில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திரும்பப்பெறக்கோரி திருப்பூரில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய அரசு முன்வைத்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டால் தற்போதுள்ள மருத்துவர்களும் , மருத்துவ மாணவர்களும் பாதிக்கப்படுவர் எனவும் ஆங்கில மருத்துவமே பெருமளவில் பாதிக்ககூடிய அந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் மாணவர்களின் மருத்துவக்கனவை கலைக்க கூடிய நீட் , நெக்ஸ்ட் தேர்வுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மருத்துவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்கிளை சார்பில் 150 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.