கூரை வீடு தீப்பிடித்து சாம்பல் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

வேப்பூர் அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 7 பவுன் நகை நாசமானது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுகரம்பலூரில் ஜெகநாதன் (வயது 85) இவர் தனது மனைவி பாப்பா வயது (வயது70 )ஆகிய இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது இரவு 12 மணிக்கு திடீரென அவரது கூரை வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்து எரிந்தது.  தீ மளமளவென பரவி பக்கத்து வீடான சீனிவாசன் (வயது 70 )வீட்டிலும் தீ பரவி வீடு எரிந்தது இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை இதுபற்றி வேப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் இரண்டு வீடும் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதில் ஜெகநாதன் வீட்டில் இருந்த 1 லட்சம் ரூபாய் பணம், 3 பவுன் நகை ,பத்திரம் சீனிவாசன் வீட்டில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம் ,4 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து வந்த திட்டக்குடி தாசில்தார் புகழேந்தி இருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் பணம் அரிசி, வேட்டி ,சேலைகள் நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார் உடன் துணை தாசில்தார் ராமர் இருந்தார்.