கோவில்பட்டி கோ. வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் கல்லூரி நிறுவனர் நாள் விழா

கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் கல்லூரி நிறுவனர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் முனைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். வேதியியல் துறைத்தலைவர் முனைவர் உமாதேவி வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் சாந்தி மகேஸ்வரி நிறுவனர் தின உரையாற்றினார். சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் முனைவர் வெங்கடாசலபதி வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து 17 பள்ளிகளில் இருந்து வருகை புரிந்த மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, கவிதை ,வினாடி வினா ,யோகா, கோலப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் பின்னர் கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்பு கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு. மேலாக சிறந்த சேவை புரிந்து வரும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு விருது அளித்து கௌரவிக்கப்பட்டது.


பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நடைபெற்ற போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு சுழற் கோப்பைவழங்கப்பட்டது. இறுதியில் ஆடை ஆயத்த துறைத்தலைவர் சந்தானலட்சுமி நன்றியுரை கூறினார்.