திருப்பூர் ஃப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை


திருப்பூர் சகோதயா நடத்திய தடகளப் போட்டியில் ஃப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை. வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் சீனியர் செக்கண்டரி பள்ளி - கோபியில்  தடகளப் போட்டி நடைபெற்றது. அதில்  சுமார் 32 பள்ளிகளில் இருந்து2500-க்கு மேற்பட்ட மாணவ,மாணவியர் வயது வாரியாக பங்கு பெற்றனர்.இப்போட்டியில் பதினொன்றாம் வகுப்பு மாணவி கீர்த்திகா  400 மற்றும் 200ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெற்று மேலும் தனித்திறனுடன் வென்று சாதனை புரிந்தார். பின்னர் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சண்முகம்   உயரம் தாண்டுதலில் முதலிடமும்,800 M ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம்  இடமும் ,400 M ஒட்டப்பந்தையதில் மூன்றாமிடமும் பெற்றதுடன் தனித் திறனுடன் வென்று சாதனை புரிந்தார்.மேலும் ஆறாம் வகுப்பு மாணவர் பிரியதர்ஷன்.P 200 M ஓட்டப் பந்தயத்தில் இரண்டாமிடமும் நீளம் தாண்டுதலில் மூன்றாமிடமும் , தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றார். உயரம் தாண்டுதலில் பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் பிரணவ் முதல் பரிசும் , சந்திரலேகா மூன்றாமிடமும் , ஏழாம் வகுப்பு மாணவி பவித்ரலட்சுமி இரண்டாமிடமும் ஆறாம் வகுப்பு மாணவன் பிரணவ் மூன்றாமிடமும் பெற்றனர். 200 ஓட்டப்பந்தயத்தில் ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் ஹரிஷ் மூன்றாமிடமும் , 800  ஓட்டத்தில் தனஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர். நீளம் தாண்டுதலில் ஏழாம் வகுப்பு மாணவர் ஜோ ஜெப்ரி மூன்றாமிடமும் பெற்றார். தொடர் ஓட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் பிரணவ் , கனிஷ்கார் , சஞ்சய் ஆகியோர் முதலிடமும் அதே பிரிவில் மாணவியர் குணஸ்ரீ அபிதனுஷ்கா, நேத்ரா, நேத்ராஸ்ரீ   ஆகியோர் மூன்றாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் , அவர்களை வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியர் திரு.நந்தகுமார் அவர்களையும் பள்ளியின் தாளாளர்.டாக்டர் சிவசாமி, செயலாளர்.டாக்டர் சிவகாமி , இயக்குனர் திரு. சக்திநந்தன் , துணை செயலாளர் திருமதி.வைஷ்ணவிநந்தன் மற்றும் பள்ளி முதல்வர் , துணை முதல்வர் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்