குட்டையை தூர்வாரி ஏரியை பலப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார் : பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன்


திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளில் குடி மராமத்து பணிகள் 2019-2020 திட்டத்தின் கீழ் குட்டையை தூர்வாரி ஏரியை பலப்படுத்தும் பணியினை பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

கரைப்புதூர் ஊராட்சி, குப்பிச்சிபாளையம் கிராமத்தில்,  உள்ள குட்டையில்,  கணபதிபாளையம் ஊராட்சி பொன்னேகவுண்டன் புதூர் கிராம குட்டை,  சித்தம்பலம் ஊராட்சி புள்ளிபாளையம் கிராமத்திலும் வடுகபாளையம் புதூர் ஊராட்சி நாசுவம் பாளையம்  கிராம குட்டை பணிக்கம்பட்டி ஊராட்சி வேலப்ப கவுண்டன் பாளையம் குட்டை ஆகிய பகுதிகளில் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் தலைமை தாங்கிபூமி பூஜை செய்து  பணிகளை துவக்கி வைத்தார் உடன்  தண்ணீர்பந்தல் நடராஜன், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ், ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் விசுவநாதன், சொக்கப்பன், ராமசாமி, சுப்பிரமணி, கழக நிர்வாகிகள் குமார் லோகநாதன் வில் பவர் மணி தம்பி கோவிந்தராஜ், மயில்சாமி, ஈஸ்வரன், ராமகிருஷ்ணன், கந்தசாமி, ARS, தங்கராஜ், சரவணன், யுவராஜ், இளங்கோ, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்