கோபி நகர அம்மா பேரவை  சார்பில் சசிகலா வின் பிறந்தநாள் விழா


ஈரோடு புறநகர் மாவட்டம், கோபி நகர அம்மா பேரவை  சார்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா வின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோபி பச்சைமலை அருகிலுள்ள கோட்டை முனியப்பன் கோவிலில் பிறந்தநாளை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு,சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர அம்மா பேரவை செயலாளர் ஏ.குமரேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் சிறப்பு அழைப்பளாராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.இதில் ஈரோடு புறநகர மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் துரைசாமி, மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளர் மணிகண்டன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் துளசிமணி, மாவட்டக் கழக அவைத் தலைவர் கள்ளிப்பட்டி காளியண்ணன், மாவட்ட பேரவை செயலாளர்  பாலசுப்பிரமணி, மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் குமார்,கோபி ஒன்றிய செயலாளர் அப்புசாமி,நம்பியூர் ஒன்றிய செயலாளர் பி. எஸ்.பொன்னுசாமி, நகரக் கழக துணைச் செயலாளர் ஜேசிபி சண்முகம் ஆடிட்டர் ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.