தாய்ப்பால் விழிப்புணர்வு கருத்தரங்கம்


 

சத்தியமங்கலத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு தாய்ப்பால் காண விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் கலைக் கல்லூரியில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகளுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது இதனை ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் சத்திய மங்கலத்தில் உள்ள தனியார் கலைக்  கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாய்ப்பால் குறிப்பு குழந்தைகள் தாய்ப்பால் கொடுக்கும் முதல் பால் தாய்ப்பால் இயற்கை அளித்த பிரசாதம் என்றும் சீம்பால் என்பது சிறப்பான தாய்ப்பால் இது சிறியது கெட்டியான மஞ்சள் நிறம் அல்லது தெளிவான திராவமாக இருக்கும் இதனை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் சீம்பால் அதிக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  உணவாகும். பாக்டீரியா தொற்று நோயிலிருந்து பல்வேறு நோய்களுக்கு பிரசவம் ஆன பின்பு குழந்தைகளுக்கு தடுப்பு மருந்தாகும் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று எடுத்துரைத்துள்ளார் இதில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர் தாய்ப்பால் அவசியம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கர்ப்ப காலங்களில் கர்ப்பிணிப் பெண்கள் என்ன உணவுகள் சாப்பிடுவது எதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் சத்தான உணவுகள் காய்கறிகள் உணவுப் பொருட்கள் என கண்காட்சி வைக்கப்பட்டது இதில் அரசு மருத்துவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கல்லூரி நிறுவனர் திரளாக கலந்து கொண்டனர். இதனை சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கௌரி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்