செப்டம்பர் 7ந் தேதி அதிகாலை நிலவில் சந்திராயன்-2 தரையிறங்கும்


 

 

செப்டம்பர் 7ந் தேதி அதிகாலை நிலவில் சந்திராயன்-2 தரையிறங்கும் சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி;

சந்திராயன்-2 நிலவை சுற்றி நீள் வட்ட பாதையில் சென்றுக் கொண்டு இருக்கிறது. நீள்சுற்று வட்ட பாதையில் சென்று செப்டம்பர் 7ந் தேதி அதிகாலை 1.40 மணிக்கு தரையிறங்கும் முயற்சியை தொடங்கும். 1.55 மணிக்கு தரையிறங்கும். இந்த நிகழ்வு உலகத்தில் முக்கிய நிகழ்வாக இருக்கும்.  இதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தரையிறங்கும் போது 1.6 கிலோ மீட்டர் வேகத்தில் போய் கொண்டு இருக்கும். இந்த வேகத்தை முழுமையாக குறைக்க வேண்டும். இந்த பணி சற்று சவாலாக இருக்கும். இதை விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். இஸ்ரோவில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் கிடையாது. யார் திறமை யானவர்களே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சந்திராயன்-2 பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் செய்யப்பட உள்ள திட்டங்களில் பெண்கள் தலைமை ஏற்க கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. சந்திராயன்-2 பிறகு பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். சந்திராயன்-2 முலம் அடுத்த நாடுகளை முன்னோக்கி செல்ல முடியும் என்பதை சொல்லி கொண்டு இருக்க முடியாது. நம்முடைய குறிக்கோளை வெற்றி பெற செய்வது தான் நம்முடைய இலக்கு. மற்ற நாடுகளை ஒப்பீட முடியாது. சந்திராயன்-2 தரையிறங்கும் போது இஸ்ரோவிற்கு பிரதமரை அழைத்து உள்ளோம். ஆனால் அவர் வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.