கச்சத்தீவு, இலங்கை தமிழர்கள் படுகொலை முதுகெலும்பு பற்றி திமுக பேச கூடாது தமிழிசை சவுந்திரராஜன்

கச்சத்தீவு, இலங்கை தமிழர்கள் படுகொலை  முதுகெலும்பு பற்றி திமுக பேச கூடாது

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி;

 

அமைதியான ஆளுமை மிகுந்த பெண் தலைவரை இழந்து இருக்கிறோம். கலைஞர் சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைத்துள்ளார். ராகுல்காந்தியை முதலில் ஸ்டாலின் முன் நிறுத்தினார். இப்போது மம்தா பானர்ஜியை முன் நிறுத்துகிறார். மோசமான மாநில அரசுக்கு முன் உதாரணம் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆராஜகத்துடனும் எதிர்கட்சியினர் படுகொலை செய்யப்படுவதுடன் கலவரத்திற்கு காரணமான தலைவராக மம்தா பானர்ஜி உள்ளார். ஸ்டாலின் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார். கலைஞர் சிலையை திறக்க யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம். அது அவரது உரிமை. ஆனால் ஸ்டாலின் போராட்ட குணம் உடையவர். அந்தந்த மாநிலத்திற்கு கொள்கையும் உரிமையும் இருக்கிறது என்று மம்தா பானர்ஜி தமிழகத்தில் வந்து சொல்ல வேண்டியதில்லை. தமிழக மக்களுக்கு தெரியும். மாநில உரிமைகளை முன் எடுத்து செல்கின்ற தமிழகம். தேசியத்தை விட்டு விடக் கூடாது என்று மக்கள் மனதில் உள்ளது. தேசிய உணர்வுடன்  மாநில அக்கறையுடன் கூடிய மக்கள். அரசியல்வாதிகள் தான் மாநில அக்கறை என்று பேசிக் கொண்டு மக்கள் இடத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி தேசியத்தை மறக்கடிக்க செய்பவர்கள் ஸ்டாலின் போன்றவர்கள் தான். தேசியவாதி என்று ஸ்டாலின் சொல்லிக் கொள்கிறார். அவருக்கே விமர்சனமோ பாராட்டோ செய்துக் கொள்ளட்டும். மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை தான் மத்திய அரசு நிறைவேற்றி காட்டி உள்ளது. காஷ்மீர் அமைதியாகவும் மக்கள் இணைந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பாகிஸ்தான் வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்வதாக பயமுறுத்துகின்றார்கள். பாகிஸ்தான் முலம் கிடைக்கின்ற வர்த்தக லாபம் மிகவும் குறைவு தான். ஆனால் காஷ்மீரில் கிடைத்துள்ள நிறைவு அதைவிட அதிகம். பங்களாதேஷ் உள்பட பல நாடுகள் இது உள் நாடு பிரச்சனை என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.  காஷ்மீர் விவகாரத்தினால் அரசியலில் திமுக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. பாராளுமன்ற நடப்பதை பார்த்து திமுக உறுப்பினர்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது லடாக் பாராளுமன்ற உறுப்பினர் எங்கள் நாட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். மக்களின் பிரதிநிதியாக பேசுகிறேன் என்று பேசியுள்ளார். காஷ்மீர் மறுசீரமைப்பில் வந்ததால் நாட்டில் உள்ள இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். காஷ்மீரை பிரிவினைவாத மாநிலமாக வைத்திருந்ததை மாற்றி மறுசீரமைப்புக்கு தமிழகம் கூட பாராட்டையும் நன்றியையும் ஒப்புதலையும் தந்துள்ளது. நாடு பிரமாண்டமான புரட்சியை பார்த்து உள்ளது. திமுக சொல்லிக் கொண்டு தான் இருக்க வேண்டும். திமுக அதிர்ந்து உட்கார தான் போய் கொண்டு இருக்கிறார்கள். காஷ்மீர் தலைவர்கள் வீட்டு காவலில் இல்லை என்று ஏற்கனவே சொல்லப்பட்டு உள்ளது. அமுல்படுத்தும் போது சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  முதுகெலும்பு  இல்லாமல் இந்திராகாந்திக்கு பயந்து காவிரி வழக்கை வாபஸ் வாங்கிய திமுக. கச்சத்தீவை தாரை வார்க்கும் போது திமுகவின் முதுகெலும்பு எங்கே போனது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது திமுக முதுகெலும்பு எங்கே போனது. முதுகெலும்பு பற்றி திமுக பேசக்கூடாது. கச்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதி. எந்தவித விவாதமின்றி தாரை வார்க்கப்பட்டது. அதை எதிர்த்து வழக்கு போட்டவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி. எதிர்த்து பேசியவர் வாஜ்பாய். நம் நாட்டு மண் எந்தவிதத்திலும் அன்னியருக்கு தாரை வார்த்துவிட கூடாது என்பதில் பா.ஜ.க. கவனமாக இருக்கிறது. 

மதவெறி என்பதற்கு என்ன அடையாளம். எதை வைத்து ஸ்டாலின் மதவெறி என்று சொல்லிகிறார். திமுகவிற்கே மத நம்பிக்கை வந்துவிட்டதே. திமுகவினர் சாரை சாராயாக அத்திவரதரை கும்பிடுகின்றனர். இதை வரவேற்கிறேன். எங்கே மதவெறி இருக்கிறது என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும்.  மதவெறிக்கும் மத நம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரிகிறதா என்று தெரியவில்லை. கலைஞர் இருந்திருந்தால் மத்திய அரசின் நட்வடிக்கைகளுக்கு பாராட்டை தெரிவித்து இருப்பார்.

Previous Post Next Post