டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த ஏா் இந்தியா விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியது

டெல்லியிலிருந்து சென்னைக்கு 138 பயணிகள் 5 விமான ஊழியா்கள் 143 பேருடன் அதிகாலை ஒரு மணிக்கு வந்த ஏா் இந்தியா விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியது.இந்த விமானம் சென்னையில் தரையிறங்க தயாரானபோது விமானத்தின் சக்கரங்கள் இயங்கவில்லை.இதையடுத்து விமானத்தை தரையிறக்காமல் வானிலேயே வட்டமடித்தது.விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தாா். உடனடியாக விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அணைத்தும் துரிதமாக செய்யப்பட்டன.ஒடுபாதையை சுற்றிலும் தயாா் நிலையில் தீயணைப்பு வண்டிகள், மருத்துவகுழுவினா், அதிரடிப்படையினா் நிறுத்தப்பட்டனா். அதன் பின்பு விமானம் தரையிறங்க அனுமதியளிக்கப்பட்டது நல்வாய்ப்பாக விமானம் தரையிறங்கும் போது, இயங்காமல் இருந்த சக்கரங்கள் தானாகவே இயங்கத் தொடங்கின. இதையடுத்து விமானம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வழக்கம் போல் சாதாரணமாக தரையிறங்கியது. அதுவரை பதட்டத்திலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் நிம்மதியடைந்தனா். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.