திருப்பூரில் பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகை யை முன்னிட்டு, திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அத் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடைபெற்றது. 


திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மைதான சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என இஸ்லாமியர்கள் திரண்டு கூட்டுத்தொழுகை நடத்தினார்கள். தியாகத்திருநாளான இன்று இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கொண்டு பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும், தங்களால் இயன்ற தான தருமங்கள் வழங்கினார்.