அனைத்து வகை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி

வேலூர் தமிழ்நாடு அரசு தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பிலும், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டப்பின் சார்பிலும் ஒருங்கிணைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில்  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் எல்.மணி, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எஸ்.ராஜேஸ்கண்ணா, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கா.பாஸ்கரன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு, தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட செயலாளர் வாரா, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொருளாளர் எம்.மோகன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எலிசா, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ஜி.விநாயம்,  தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பெ.இளங்கோ, உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் நன்றியும் தெரிவித்துக்கொண்டனர். அப்போது அவரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவ சான்றின் பேரில் விடுப்பில் உள்ளவர்களுக்கும் நியாமான காரணங்களினால் வர இயலாத நிலையில் உள்ளவர்களுக்கும் விலக்கு வழங்கி ஆசிரியர்களிடையே சுமுகமான சூழ்நிலையில் தேர்தலை நடத்திட்ட மாவட்ட தேர்தல் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் அவர்களுக்கு அனைத்து வகை ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் ஏப்ரல் 2019ல் நடைபெற அறிவிக்கப்பட்ட வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற சுமார் 6000 ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உழைப்பூதியம் அளிக்கப்படவில்லை.  மூன்று பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றதற்கான ஊதியத்தினை உடனே வழங்கிட கோருகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Previous Post Next Post