கோபியில் புறா பந்தய இறுதி போட்டி


 

வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=tYH2hWuqO2o&feature=youtu.be

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்  47  ஆண்டுகளாக நடைபெற்றுவரும்  புறா பந்தயத்தின் இந்த ஆண்டுக்கான  இறுதிப்போட்டி சுதந்திர தினமான காலையில் துவங்கியது. போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற புறாக்களை வளர்த்தவர்களுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம்  கோபியில் 47  ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் புறா பந்தயம்  துவங்கியது. இந்த பந்தயத்தில் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட புறா வளர்ப்பவர்கள் தாங்கள் வளர்க்கும் பந்தய  புறாக்களுடன் கலந்து கொண்டனர். இந்த புறா பந்தயம் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு நாள் மற்றும் 2 நாள் போட்டிகளாக 5 கட்டங்களில் நடைபெறும், இப்போட்டியில் சாதாரண புறா மற்றும்  வானத்தில் சாகசம் செய்யும் கர்ண புறாக்கள் கலந்து கொண்டது. போட்டியில் கலந்து கொண்ட புறாக்கள் வானில் பறக்கும்போது அடையாளம் காண்பதற்காக புறாவின் இறகுகளின் வால் பகுதியில் நடுவர்களால் வண்ண முத்திரை வைக்கப்பட்ட பின்பு ஒரே நேரத்தில் வானில் பறக்கவிடப்பட்டது. சுமார் ஆறு மணி நேரத்திற்கு பின்பு தரையிறங்கும் புறா முதலிடைத்தையும் அதற்கு முன்பாக கீழே இறங்கும் புறாக்கள் வரிசைப்படி இரண்டாவது மூன்றாவது இடங்களை பெற்றதாக கணக்கிடப்பட்டது. ஐந்து கட்டங்களாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று அதிக நேரம் வானில் பறந்த புறாக்கள் புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி்பெற்றதாக தேர்வு செய்யப்பட்டது. இதில் சாதாரண புறா கர்ணப்புறா,பந்தயத்தில் வெற்றிபெற்ற தியாகராஜன் என்பவரின் புறா முதல் பரிசினை வென்றது.

Previous Post Next Post