திருப்பூரில் எச்.ஐ.வி.நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அமைப்பதற்க்கான ஆலோசனை கூட்டம்

நேட்டீவ் மெடிக்கேர்  என்ற  தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. இம்மையம் சார்பில் விழிப்புணர்வு நிக்ழச்சி மற்றும் ஆலோசனை கூட்டமானது , திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே இது குறித்து அத்தனியார் தொண்டு நிறுவன அதிகாரிகள் கூறுகையில் :-
எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட தனி நபரையோ, அவர்களின் குடும்பங்களை சார்ந்தவரகளை கண்டறிந்து அவர்களுக்கான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதோடு , நோயால் பாதிக்கப்பட்டவருக்கு.நோய் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேவையான மருந்து மத்திரைகள்  அரசாங்கத்தின் உதவியோடு இலவசமாக வழங்கப்படுவதாகவும், தர்போது திருப்பூர் மாவட்டத்தில் நான்கு ஆண்டுகள் தங்கி, எய்ட்ஸ் குரித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு , திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த இரண்டாயிரத்தில் 250 பேர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளதாகவும், மேலும் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு சத்துப் பொருட்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு,  சிறப்பு சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு,  சுயமாக தொழில் துவங்க வங்கிகள் மூலம்  தேவையான கடனுதவி பெற்றுத் தருவதற்கான முயற்சிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்