மத்திய அரசு கொண்டு வந்த என்.ஐ.ஏ, யூ.ஏ.பி.ஏ, ஆர்.டி.ஐ மற்றும் காஷ்மீர் மாநில உரிமை ரத்த கண்டித்து தலைமை தபால் நிலையம் முற்றுகையிட்டு போராட்டம்

பழனியில் மத்திய அரசான பாஜக அரசு கொண்டுவந்த NIA,UAPA,RTI, மற்றும் காஷ்மீர் மாநில உரிமை அழிப்பை கண்டித்த எஸ்டிபிஐ  கட்சியின் சார்பாக தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பழனியில் தலைமை தபால் அலுவலகத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்டு பாஜக அரசு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை மனதில் வைத்துக் கொண்டு மாநில சுயாட்சியை பறிக்கும் விதமாக NIA,UAPA, RTI,மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான 370 மற்றும் 35a ஆகிய சட்டங்களை நீக்கியும் மக்களின் அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள உதவிகரமாக இருந்த RTI சட்டத்தை திருத்தியும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள  மத்திய பாஜக அரசை கண்டித்து பாசிசம் இந்தியாவை விட்டு வெளியேறு என்ற முழக்கத்துடன் எஸ்டிபிஐ கட்சி மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தில் தலைமையாக தமீம் அன்சாரி பங்கேற்றார் முன்னிலையாக அக்பர் பங்கேற்றார்.இந்த போராட்டத்தில் 70க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் முற்றுகை போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் கைசர்அலி கூறுகையில் இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு மக்களின் விரோத செயல்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது இதுவரையில் இல்லாத அளவிற்கு 30 சட்ட மசோதாக்களை ஒரே கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளது. மேலும் NIA,UAPA, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து RTI போன்ற சட்டங்களை நீக்குவது மற்றும் திருத்தம் செய்தது மக்கள் விரோத போக்கை கடைபிடிப்பதாக இருக்கின்றது.என்று கூறினார்.இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆகஸ்டு 9 வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் இன்று பாசிச பாஜகவே வெளியேறு என்ற கோசத்துடன் மத்திய அரசை கண்டித்து பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். மக்களின் விரோத செயல்களில் ஈடுபட்ட மத்திய அரசு உடனடியாக இயற்றிய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். இனி வரும் காலங்களில் எந்த ஒரு சட்டத்தையும் மக்களின் அனுமதி பெற்ற இயற்ற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் இறுதியாக காவல்துறை போராட்டக்காரர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.