நத்தம் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே  50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். நத்தம் அடுத்த கருத்தலக்கம்பட்டி சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் வெள்ளிமலை விவசாயி. இவரது பசுமாடு அதே பகுதியில் உள்ள அவரது வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த 50 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள்,  நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர்(பொறுப்பு)திருக்கோள்நாதர் தலைமையில் முன்னணி தீயணைப்பாளர் லட்சுமணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்த பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டன சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பொதுமக்கள் உதவியுடன் பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.