சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதிய கல்வி கொள்கையை விளக்கி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினர்

சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதிய கல்வி கொள்கையை விளக்கி சீர்காழி அருகில் உள்ள விவேகானந்தா, பெஸ்ட் மற்றும் பூம்புகார் கல்லூரி, புத்தூர் கல்லூரி  மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏராளமான புத்தகங்களை வழங்கினர். தேசிய கல்விக் கொள்கை வரைவு என்ற பெயரில் கல்வியை பறிக்கும் செயல் உள்ளது. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் 15 வருடம் பயின்று மேல்நிலைப்பள்ளியில் கல்வி சான்று பெற்றாலும் கல்லூரியில் சேர தகுதியாகக் கருதப்படமாட்டார்கள். தேசிய தேர்வு முகமை தேர்வில் தேர்ச்சிப் பெற்றால் தான் கல்லூரியில் சேர முடியும். தற்போது மருத்துவக் கல்லூரியில் சேர நீட் போன்று பி.ஏ., பி.எஸ்சி போன்ற படிப்புகளுக்கு தேர்வு எழுதவேண்டும் ஆறு வயதிலிருந்து மூன்றாவது மொழியை கட்டாயமாக கற்கப்பட வேண்டும். கல்வியியல் கல்லூரிகள் மூடப்பட்டு பல்கலை கழகங்களில் நான்கு வருடம் படித்தால் தான் ஆசிரியராக சேர முடியும். பள்ளி முதல் கல்லூரி வரை சந்தையில் போட்டிப்போட்டு தரத்தை நிருபிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பின்பற்றும் 69 சதவீதம் இட ஓதுக்கீடு பின்பற்றுவதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. சமஸ்கிருதம் கற்றலுக்கு கூடுதல் முக்கியத்துவம் பிற இந்திய மொழி வளர்ச்சிக்கு வாய்ப்புகள் கிடையாது. இந்திய அரசியல் சட்டம் உத்திரவாதம் படுத்தியுள்ள மாநில அரசு உரிமைகள் முக்கியமாக பறிக்கப்பட்டு பிரதமர் தலைமையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் தேசிய கல்வி ஆணையமே முக்கிய முடிவுகளை எடுக்கும் மையமாக இருக்கும். மேற்கண்ட செய்திகள் அடங்கிய புத்தகத்தை தந்தை பெரியார் திராவிடர் கழக நாகை மாவட்ட செயலாளர் சீர்காழி பெரியார் செல்வம் தலைமையில் சீர்காழி நகர தலைவர் மனோஜ், தோழர்கள் தமிழரசன், பிரவின், தினேஷ் உள்ளிட்டவர்கள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும், ஆயிரக்கணக்காண புத்தகங்களை வழங்கினார்கள்.


Previous Post Next Post