கோபியில் ராஜீவ் காந்தியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் 


முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 71வது பிறந்தநாள் விழா,தமிழக காங்கிரஸ் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.வி.சரவணன் தலைமையில் கோபி பஸ் நிலையத்தில் உருவப்படத்திற்கு மலர் தூவி நிர்வாகிகள் மரியாதை செய்தனர். இதில் சேலம் மாவட்ட முன்னாள் தலைவர் மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார், அதனை தொடர்ந்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் பி .உதயகுமரன் ரத்ததானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி பி.என் நல்லசாமி,கோபி சட்டமன்ற தலைவர் எம்.விவேகானந்தம், மகளிர் காங்கிரஸ் வசந்தி, நம்பியூர் வட்டார தலைவர் சண்முகம், மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.