திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற 73ம் ஆண்டு சுதந்திர தின  கொண்டாட்டம் 

திருப்பூர் மாவட்ட  சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 73 சுதந்திரதினவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.  


பின்னர், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், பலூன்;களையும் பறக்கவிட்டார்.


இதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த 84 அரசு அலுவலர்கள், 59 காவல் துறையினர் ,10 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் மற்றும் 1 சமூக ஆர்வலர் என மொத்தம் 153 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1,40,000 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினையும், வருவாய்த் துறையின் சார்ப்பில, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்  54 பயனாளிகளுக்கு ரூ.1,42,250 மதிப்பில் கல்வி உதவித்தொகையினையும் , 51 பயனாளிகளுக்கு ரூ.10,77,500 மதிப்பில் இயற்கை மரண நிவாரண உதவித்தொகையினையும், 28 பயனாளிகளுக்கு ரூ.2,36,00 மதிப்பில் திருமண உதவித்தொகையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.2,00,000 மதிப்பில் விபத்து நிவாரண உதவித்தொகையினையும் 8 பயனாளிகளுக்கு ரூ.96,000 மதிப்பில் முதியோர் உதவித் தொகையினையும், 5 பயனாளிகக்கு ரூ.60,000 மதிப்பில் விதவை உதவித் தொகையினiயும்,  2 பயனாளிகளுக்கு ரூ. 24,000 மதிப்பில் கணவாரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகையினையும், 30 பயனாளிகளுக்கு ரூ. 3,60,000 மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையினையும்,  மவாட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில்  3 பயனாளிகளுக்கு ரூ.26,538 மதிப்பில் விலையில் எம்ப்ராய்டரிங் தையல் இயந்திரமம், தாட்கோ திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.11,23,205 மதிப்பில் மானியக் கடனுதவியும், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.17,46,866 மதிப்பில் வேளாண் உபகரணங்களும், தொழிலாளர் நல அலுவகம் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.1,42,000 மதிப்பில் இயற்கை மரண நிவாரண உதவித்தொகையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.14,500 மதிப்பில் கல்வி உதவித் தொகையினையும் மற்றும் 2 பயனாளிகளுக்கு ரூ.10,000 மதிப்பில் திருமண உதவித்தொகையினையும் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 4 பயனாளிகளுக்கு  ரூ.2,53,250 மதிப்பில் மானிய கடனுதவியும் என 221 பயனாளிகளுக்கு ரூ.56,52,139 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். கே.எஸ்.பழனிசாமி, இ.ஆ.ப அவர்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து,  மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் பிரேமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செங்கப்பள்ளி குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவினாசி புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் பூலுவப்பட்டி ஏ.பி.எஸ். அகாடமிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாலசமுத்திரம் விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 15 வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வீரபாண்டி பிரிவு விரிக்ஷா இண்டர்நேஷனல் பள்ளி ஆகிய 9  பள்ளிகளை சேர்ந்த  886  மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  சான்றிதழ்; மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இவ்விழாவில், திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சய்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர்கள் பிரபாகரன், உமா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். சுகுமார்,  திட்ட இயக்குநர்; (ஊரக வளர்ச்சி முகமை) .ரமேஷ்குமார், தாராபுரம் சார் ஆட்சியர்  பவன்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள்  செண்பகவள்ளி (திருப்பூர்), இந்திரவள்ளி (உடுமலைப்பேட்டை), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு)சாகுல் ஹமீது,  சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் விமல்குமார், துணை ஆட்சியர்கள், காவல்துறையினர், அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.