நகராட்சி ஒப்பந்த துப்புரவு ஊழியர் பலி


   பல்லாவரம் அருகே பம்மல் நகராட்சி ஒப்பந்த துப்புரவு ஊழியர் ஓட்டுனரின் அலட்சியத்தால் குப்பை ஏற்றி செல்லும் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலி.

   சென்னை பல்லாவரம் அடுத்தல் அனாகபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் இவருடைய மனைவி மதியழகி (45) பம்மல் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார் அப்பகுதியில் உள்ள குப்பைகளை  குட்டி யானை வாகனத்தில் சேகரித்து காமராஜபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டிவிட்டு காமராஜபுரம் பெட்ரோல் பங்க் திருபத்தில் ஓட்டுனர் சச்சின் வேகமாக திரும்பும் போது வாகனத்தின் பக்கவாட்டில் உட்கார்ந்திருந்த மதியழகி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் இதனை கண்ட ஓட்டுனர் அங்கிருந்து தப்பி செனறார் .தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தப்பி சென்ற ஓட்டுனர் சச்சினை போலிசார் தேடி வருகின்றனர். ஓட்டுனரின் அலட்சியம் மற்றும் குப்பை வாகனங்களில் பாதுகாப்பு கைப்பிடிகள் இல்லாததுமே காரணம் என்று அவருடன் பயணித்த சக ஊழியர்கள் தெரிவித்தனர்.