தூய்மை காவலர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று ஏ ஐ டி யு சி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் தூய்மை  காவலர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் எஸ். சின்னச்சாமி ,மாவட்ட பொதுச் செயலாளர் ஜி. வெங்கடாஜலம் உட்பட சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியங்கள் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.