அடிப்படை வசதி செய்து தரக்கோரி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திட்டக்குடியை அடுத்துள்ள பெண்ணாடம் அருகே உள்ள திடீர் குப்பத்தில் அடிப்படை வசதி , தண்ணீர் வசதி , நடைபாதை வழி , இறந்தவர்களை கொண்டு செல்ல வழிவகை செய்து தர வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பானுமதி தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும். இல்லை அடுத்த கட்டமாக வருகிற 15-ஆம் தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி உண்ணாவிரதம் செய்வோம் என கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கோகுலகிரிஸ்டீபன், வட்ட செயலாளர் செல்வராசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் பாட்ஷா, அம்சவள்ளி,  இளைஞர் சங்க தலைவர் ஜாபர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.