கோலாட்டத்தில் தேர் வட பின்னல்: ஆசிய சாதனையை அலேக்காக தூக்கிய மாணவிகள்


வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=gbxotkUca4Y&feature=youtu.be


பின்னல் கோலாட்ட பரதநாட்டியம் பிரிவில் 62 மாணவிகள் இணைந்து திருப்பூரில் உலக சாதனை நிகழ்த்தினர். திருப்பூர் மங்கலம் சாலை எஸ்.ஆர் நகர் பகுதியில் சங்கர்- சந்தியா தம்பதியினர் சாய்கிருஷ்ணா நுண்கலைப் பள்ளி என்ற நடன பயிற்சி கூடத்தகனை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 2017ம் ஆண்டு 42 மாணவிகள் மூலம் பின்னல் கோலாட்ட பரதநாட்டிய நிகழ்ச்சியை 20 நிமிடங்களில் 3 பின்னல்கள் என நடனமாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தனர். இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக இவர்களே சுதந்திர தினமான இன்று 62 மாணவிகள், 62 வண்ண கயிறுகள் மூலம் பின்னல் கோலாட்ட பரதநாட்டியத்தில் ஈடுபட்டனர். இதில் தேர் வட பின்னல், வங்கிப் பின்னல், உறிப் பின்னல் என மூன்று வகையான பின்னல்களை கோலாட்டம் மற்றும் பரதநாட்டிய அசைவுகளுடன் 40 நிமிடங்களில் செய்து அசத்தினர். இந்த நிகழ்வு ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட் அமைப்பினரால் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டு சங்கர் - சந்தியா தம்பதியினருக்கு ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட் அமைப்பின் தீர்ப்பாளர் ஹரீஷ் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.