ஊத்துக்குளியில் மடிக்கணினி, அம்மா இருகக்கார வாகனம் வழங்கினார் : பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு.என்.டி.வெங்கடாச்சலம்  

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில்  1226 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.27 கோடி  மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் மற்றும்  மகளிர்த்திட்டத்தின் சார்பில் 72 உழைக்கும் மகளிருக்கு ரூ.18.00 இலட்சம் மதிப்பில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களையும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு.என்.டி.வெங்கடாச்சலம் வழங்கினார். 


விழாவில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர்த்திட்டத்தின் சார்பில் 72 உழைக்கும் மகளிருக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.18.00 இலட்சம் மதிப்பில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களும் மற்றும் பள்ளிக்கல்வித்தறையின் சார்பில் ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, குன்னத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சரவணபுரம்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளிரவெளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 391 மாணவர்கள் மற்றும் 835 மாணவியர்கள் என 1226 மாணவ, மாணவியர்களுக்கு தலா  ரூ.10,400 மதிப்பில் ரூ. 1,27,50,400 மதிப்பிலான  விலையில்லா மடிக்கணினிகள்  என 1298 நபர்களுக்கு 1,45,50,400 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு.என்.டி.வெங்கடாச்சலம் வழங்கி தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொது மக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் நல்ல முறையில் பெற்றுக்கொண்டு பயன்பெற வேண்டுமென தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்(பொ)பழனிசாமி, உதவி திட்ட அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், தாமஸ், மார்டின், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், சந்திரிகா, ஊத்துக்குளி வட்டாட்சியர் கார்த்திக்கேயன், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post