உடைந்து விழும் நிலையில் மின் கம்பம்


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் உடையார்குடி செங்குந்தர் திருமண்டபம் அருகே மின் கம்பம் உடைந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்களிடம் விபத்து அபாயம் உள்ளது. காட்டுமன்னார்கோயில் செங்குந்தர் திருமண மண்டபம் அருகே சாலையோரம் உள்ள உயர் அழுத்த மின் கம்பி செல்லும் மின் கம்பம் உடைந்து விழும் நிலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும்  நிலையில் உள்ளது.இதனால் சாலையில் செல்பவர்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை இருப்பதால் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.