கடலூர் மேற்கு மாவட்ட வணிகர் அணி சார்பில் எழுச்சித்தமிழர் பிறந்தநாள் விழா

கடலூர் மேற்கு மாவட்ட வணிகர் அணி சார்பில் எழுச்சித்தமிழர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கடலூர் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி சார்பில் வணிகர் அணி கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் பாசார் சுந்தர் தலைமையில் திட்டக்குடி அடுத்த ஆவட்டியில் எழுச்சித்தமிழர் திருமாவளவன் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல அமைப்புச் செயலாளர் திருமாறன், மற்றும் மாநில துணைச் செயலாளர் தயா தமிழன்பன் மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


பிறந்தநாள் நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக ஆவட்டி மகா முனீஸ்வரர் ஆலயத்தில் கிடாவெட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆவடி ரோட்டில் கட்சியின் கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. எழுச்சித்தமிழரின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது பின்னர் 2000 பேருக்கு வணிகர் அணி சார்பில் கறி விருந்து உபசரிப்பு பின்னர் 2000 பேருக்கு வணிகர் அணி சார்பில் கறி விருந்து உபசரிப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் விஜயகுமார் ,சமூக பாதுகாப்பு பேரவை மணிவேல், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் கழுதூர் சங்கர் ஆவட்டி ராஜேந்திரன் மற்றும் எழுத்தூர் கோபால், தொழுதூர் ரமேஷ் ,தச்சூர் பாண்டியன் ரஜினி பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.