திருப்பூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைபட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை புதிய குடும்ப அட்டை வேண்டியும் சாலை வசதி குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 250 மனுக்களை பெறப்பட்டது. தொடர்ந்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு 6000 மதிப்பில் காதொலிக் கருவியினையும் 1 பயனாளிக்கு 1000 மதிப்பில் ஊன்றுகோலினையும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அவிநாசி மற்றும் மடத்துக்குளம் ஆகிய வட்டங்கனைச் சேர்ந்த 6 பயனாளிகளுக்கு தலா 12000 மதிப்பில் மொத்தம் 72000 மதிப்பிலான முதியோர் மற்றும் விதவை உதவித் தொகையினையும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிகளுக்கு 5018 மதிப்பில் விலையில்லா சலவை இயந்திரங்களையும் என 10 பயனாளிகளுக்கு 84018 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திர சேகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post