திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்த நாள் பவள விழா


 

முன்னாள் பிரதமர் 'பாரத ரத்னா' ராஜீவ்காந்தி அவர்களின் 75-வது பிறந்த நாள் பவள விழா திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் மாவட்ட தலைவருமான ப.கோபி தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. வெள்ளக்கோவில் தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட முத்தூரில் காலை 10.00 மணியளவில் கொடியேற்று விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.தேசிய பொதுக்குழு உறுப்பினரும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ப.கோபி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் RM.பழனிச்சாமி,Ex.MLA., கலந்துகொண்டு கல்வெட்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப் பட்டது. தலைவர் ராஜீவ்காந்தி அவர்களது சாதனைகள் குறித்த துண்டுபிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் முத்தூர் பகுதியில் உள்ள கடை வியாபாரிகளுக்கு விநியோகிக்கப் பட்டன.


 

அதனைத் தொடர்ந்து மதியம் 12.00 மணியளவில் வெள்ளக்கோவிலில் உள்ள சர்வாலயம் முதியோர் இல்லத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் ப.கோபி, மாநில பார்வையாளர் RM.பழனிச்சாமி, Ex.MLA., ஆகியோர் கலந்துகொண்டு முதியோர் இல்லத்தில் உணவு வழங்கினர்.


 

மேற்படி நிகழ்ச்சிகளில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.