பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் 73ஆம் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. பழனி  மூலக்கடை அருகில் 73 வது சுதந்திர தின விழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் காஜாமைதீன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்கள் செய்த தியாகங்களையும் ஒற்றுமைகளையும் அங்கிருந்த  குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பழனி நகர தலைவர் இஸ்மாயில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயலாளர் சதாம் உசேன், அக்பர் ,சையத் இப்ராகிம், மன்சூர் ரஹ்மான், இதேபோன்று ஆயக்குடி நெய்க்காரப்பட்டி ஆகிய இடங்களிலும் கொடி ஏற்றப்பட்டது ஏராளமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய  எஸ்டிபிஐ கட்சியின் பொறுப்பாளர்களும் மதரஸா குழந்தைகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.