திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வரவேற்பு : திமுகவினருக்கு அனிதா ராதாகிருஷ்னன் அழைப்பு


திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வரவேற்பு : திமுகவினருக்கு அனிதா ராதாகிருஷ்னன் அழைப்பு. நெல்லையில் நடக்கும் ஒண்டிவீரன் நினைவு அஞ்சலி விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க கழகத்தினர்கள் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும்படி தெற்கு மாவட்ட பொருப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருப்பாளர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உள்ளதாவது:- நெல்லையில் நடைபெறவுள்ள சுதந்திர போராட்டவீரர் ஒண்டிவீரன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று அஞ்சலி செலுத்துவதற்காக நாளை காலை 8.20 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார். எனவே விமான நிலையத்தில் அவருக்கு சிறந்த வரவேற்பளிக்க கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழக நிர்வாகிகள், அணிகள் அமைப்பாளர்கள், சார்பு அணியினர் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து வரவேற்பளிக்க கேட்டுக்கொள்கிறேன் என செய்தி குறிப்பில்  கூறியுள்ளார்.