அவிநாசியில் 2.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டபேரவைத் தலைவர் ப.தனபால் வழங்கினார்


திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சேவூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மகளிர் திட்டம் பள்ளிக் கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 2090 நபர்களுக்கு 2.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் ப.தனபால் வழங்கினார். இவ்விழாவில் அவர் பேசுகையில்.இம்மண்ணுலகை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் என்றென்றும் வாழ்ந்து வருகின்ற மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தியுள்ளார்கள். வல்லரசு நாடுகளே வியக்கும் வண்ணம் பல புதுமைகளை
செய்து பல்வேறு திட்டங்களை வாரி வழங்கி புரட்சிபடைத்தவர் நம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களே. மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்தும் மறையாமலும் நம்முடன் வாழ்ந்து கொண்ட நிலையில் அவர்கள் விட்டுச்சென்ற அனைத்து திட்டங்களையும் மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் மறைந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில்; உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதன் படி தமிழகம் முழுவதும் இத்திட்டம் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்கள் கல்வித்துறைக்காக 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கினார்கள். அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி இன்று வரை நமது மாணவச் செல்வங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2017-2018 மற்றும் 2018 -2019 ஆகிய கல்வி ஆண்டில் பயின்ற மாணவ  மாணவியர்களுக்கு விரைவில் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்பதை
தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவிநாசி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக எண்ணற்ற வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதி பொது மக்களின் 60 ஆண்டு கால் கோரிக்கையான அவிநாசி அத்திக்கடவு திட்டப்பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும் மாணவ மாணவியர்களின் நலனில்
அக்கறை கொண்டு அவிநாசியில் அரசு கலைக்கல்லூரி துவங்கப்பட்டு புதிய கட்டிடமும் திறக்கப்ட்டுள்ளது. மேலும் பொது மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் எவ்வித தங்குதடையுமின்றி கிடைத்திட புதிய திட்ட பணிகள் துவங்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் இப்பகுதியில் குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளை பொது மக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் நல்ல முறையில் பெற்று பயன்பெற வேண்டுமென சட்டபேரவை தலைவர் ப.தனபால் இவ்வாறு கூறினார். விழாவில் மகளிர் திட்டத்தின் சார்பில் அவிநாசி ஊராட்சி ஒன்றியம் அவிநாசி மற்றும்
திருமுருகன் பூண்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளைச்சார்ந்த 189 உழைக்கும் மகளிருக்கு தலா 25,000 மதிப்பில் 47,25,000 மதிப்பில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்களும் வருவாய்த் துறையின் சார்பில் 31 பயனாளிகளுக்கு 13,44,520 மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களும் 61 பயனாளிகளுக்கு 7,20,000 மதிப்பில் முதியோர் உதவித் தொகையினையும் 25 பயனாளிகளுக்கு 3,12,000 மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையினையும 8 பயனாளிகளுக்கு 1,67,500 மதிப்பில் இயற்கை மரண நிவாரண உதவித் தொகையினையும் 1 பயனாளிக்கு 10,000 மதிப்பில் திருமண உதவித்தொகையினையும் 15,பயனாளிகளுக்கு 35,780 மதிப்பில் கல்வி உதவித் தொகையினையும் மற்றும் 50 பயனாளிகளுக்கு 2,50,000 மதிப்பில் புதிய மின்னனு குடும்ப அட்டைகளும் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளிரூபவ் கருவலூர் அரசு மேல்நிலைப் பள்ளி கானூர் அரசு மேல்நிலைப்பள்ளி
அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெக்கலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி என அவிநாசி சட்டமன்றத் திற்குட்பட்ட 7 பள்ளிகளைச் சார்ந்த 855 மாணவர்கள் 855 மாணவியர்கள் என 1710 மாணவ மாணவியர்களுக்கு தலா 12,273 மதிப்பில் 2,09,86,830 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் என 2090 நபர்களுக்கு 2,85,51,630 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டபேரவைத் தலைவர் ப.தனபால் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து சேவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 10 நபர்களுக்கு 24,67,800 மதிப்பிலான வங்கி கடனுதவிகளையும் வழங்கினார்.
முன்னதாக கால் நடை பராமரிப்புத் துறையின் சார்பில் அவிநாசி வட்டம் தண்டுக்காரன்பாளையத்தில் 31.05 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருந்தக கட்டிடனத்தினையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது  திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் செண்பகவள்ளி கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி உதவி இயக்குநர் பிரகாசம் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பழனிசாமி அவிநாசி வட்டாட்சியர் வாணிஜெகதாம்பாள் கூட்டுறவு சங்கத்தலைவர்கள் வேலுச்சாமி சுப்பிரமணியம் அரசு அலுவலர்கள் மகளிர்த்திட்ட அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மாணவமாணவியர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.