மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு

 மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பிளஸ் 2 படத்த மாணவ - மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் குடும்பத் தினருடன் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் பள்ளி ஆட்சி மன்றக்குழு நிர்வாக செயலாளர் பாஸ்கரன், கல்வி ஆலோசகர் முருகையன், பள்ளி நிர்வாகிகள் மற்றும்  ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்  குடும்ப உறுப்பினர்கள் அறிமுகம், குழு விளையாட்டுகள், மலரும் நினைவுகள் பகிர்வு, புத்தாக்க பயிற்சி, வகுப்புஆசிரியர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள்  நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்குப்   பிறகு பள்ளியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும்  பணியாளர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவிக்கும்  வகையில் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்து, பல நலத்திட்ட உதவிகளையும்  வழங்கி மகிழ்ந்தனர். இதில், பள்ளியில் பயின்று தற்போது அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி, சிங்கப்பூர்  உள்ளிட்ட நாடுகளிலும்  பெங்களுர் , சென்னை, மும்பை போன்ற மாநிலங்களிலும் பணியாற்றி வரும்  45-க்கும்  மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டு மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.