திருப்பூர்காரர்களின் நெஞ்சங்களில் வாழும் தியாகி  ‘‘சுந்தர ஆத்தா’’


வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=7wGG2sWn-v8&feature=youtu.be


சுதந்திரக் கொடியை உயிரைக் கொடுத்து காத்தவர் திருப்பூர் குமரன் என்றால் சுதந்திரப் போராட்டத்திற்காக பதின்ம வயதிலேயே தனது சுதந்திர போராட்டத்திற்க்கு நகைகளை கழட்டி காந்தியடிகளிடம் கொடுத்த சுந்தர ஆத்தாவை தெரியுமா?... சுதந்திர தின நாளான இன்று திருப்பூர் காரர்கள் நினைவில் கொள்ள வேண்டியவர் திருப்பூர் குமரன் மட்டுமல்ல, சுந்தர ஆத்தாவும் தான். ஆமாங்க., நாடு முழுக்க காந்தியின் அகிம்சா வழிப் போராட்டம் பரவி இருந்த நேரம் அது காந்தியின் கொள்கைகளில் மேல் பற்று ஏற்பட்ட பலர் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் காந்தியடிகள் பொதுக் கூட்டத்துக்கு சென்ற ஒரு 15 வயது சிறுமி, தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழட்டி காந்தியடிகளின் கையில் கொடுத்தார்! சுதந்திரப் போராட்ட செலவுகளுக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தார். நகைகளை பெற்றுக்கொண்ட காந்தியடிகள், அந்தச் சிறுமியிடம் இனிமேல் நீங்கள் கதர் ஆடை தான் அணியவேண்டும் என்று காந்தி கூறினார். அவர் சொன்னபடியே அதன்பிறகு கதர் ஆடையை மட்டுமே அணிந்து கொண்டிருந்தார் அந்த சிறுமி!. யார் அந்தச் சிறுமி? திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த தியாகி சுந்தராம்பாள் தான் அவர்! காந்தியடிகளின் அகிம்சை போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட அவர் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த அந்த காலகட்டத்திலேயே கதர் ஆடை அணிந்து கொண்டு சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று உள்ளார்! தனிநபர் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார் தனது 3 வயது குழந்தையுடன்.., சுதந்திரத்திற்கு பிறகு பின்னாளில், திருப்பூர் வீரபாண்டியில் உள்ள ஆத்தாள் தோட்டம் என்கிற அவரது தோட்டத்தில் 91 வயது வரை கதர் ஆடை யுடன் இணைந்து கதர் ஆடை யுடன் இணைந்து வாழ்ந்து தன் உயிர் நீத்தார்.. தற்போது அவருக்கு வீரபாண்டி கதர் வித்தியாலயம் பகுதியில் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. சுந்தர ஆத்தா மறைந்திருந்தாலும் திருப்பூர் காரர்களின் மனதில் இன்னும் தியாகியாகவே வாழ்கிறார்.