ரியாத்திலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.70.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ரியாத்திலிருந்து மஸ்கட் வழியாக  சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.70.5 லட்சம் மதிப்புள்ள 1.9 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கக் கட்டிகளை எமா்ஜென்சி விளக்கிற்குள் மறைத்து வைத்து கொண்டு வந்த உத்திரப் பிரதேசத்தை சோ்ந்த முலும்மில் உசேன் (40) என்ற பயணியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தியதில் முலும்மில் உசேன் ரியாத்தில் 4 ஆண்டுகள் டிரைவராக பணியாற்றிவிட்டு சொந்த ஊா் திரும்பியதாகவும் இவருடைய நண்பா் ஒருவா்  இந்த எமா்ஜென்சி விளக்கை கொடுத்து இதை எடுத்து கொண்டு சென்னைக்கு போ.அங்கு எனது உறவினா் ஒருவா் இந்த விளக்கை வாங்கிக் கொள்வாா் என்று கூறியதாகவும், அதற்கு வெகுமதியாக ரியாத் சென்னை விமான டிக்கட் எடுத்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணையை தொடர்ந்து இவரிடம் இந்த விளக்கை வாங்க வந்த கடத்தல் ஆசாமியை அதிகாரிகள் தேடி வருகின்றனா்.