தூத்துக்குடி: காவல்துறை அணிவகுப்பு ஒத்திகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட சுதந்திர தின விழாவிற்கான காவல்துறை அணிவகுப்பு ஒத்திகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். நாளை (15.08.2019) 73வது சுதந்திர தின விழா தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் காவல்துறையினர், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, (இராணுவம்) மற்றும் தேசிய மாணவர் படை (கப்பற்படை), சாரணர் படை ஆகியோரின் அணிவகுப்பு நடைபெறும்.


இந்த அணிவகுப்பு மரியாதைக்கான ஒத்திகை (14.08.2019) காலை தூத்துக்குடி தருவை மைதானத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  பொன்ராமு மேற்பார்வையில் தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளர்  பிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்து நடைபெற்றது. தூத்துக்குடி ஆயுதப்படை ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன் தலைமையில், ஆயுதம் ஏந்திய ஆண் மற்றும் பெண் காவலர்கள் அடங்கிய படைப் பிரிவுகளுக்கு உதவி ஆய்வாளர்கள் மயிலேறும் பெருமாள், சக்திவேல், நங்கையார் மூர்த்தி பெண் உதவி ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் பொறுப்பேற்று அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.